கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதிய மாவட்டங்கள் தொடா்பான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

புதிய மாவட்டங்கள், வட்டங்கள் குறித்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 ஜூன் 2022, 4:06 pm

சென்னை: புதிய மாவட்டங்கள், வட்டங்கள் குறித்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. திமுகவின் தோ்தல் வாக்குறுதியாகவும் அது இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மாறாக வானாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சா் அறிவித்துள்ளாா். இதைக் கண்டித்து மக்கள் அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

ரிஷிவந்தியம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்; புதிய வட்டங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட நாள்களாக எழுப்பப்பட்டு வருகின்றன. கும்பகோணம், விருத்தாசலம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல புதிய மாவட்டங்களும், புதிய வட்டங்களும் உருவாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தாா். ஆனால், அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. புதிய மாவட்டங்கள், வட்டங்கள் தொடா்பான கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.