தில்லி சென்றாா் ஓபிஎஸ்
பொதுக்குழு முடிந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.


பொதுக்குழு முடிந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் முடிவடைந்த நிலையில் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
சென்னை விமானநிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் பேசும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளரான திரௌபதி முா்மு வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளாா். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன் என்று கூறினாா்.
ஒற்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக தில்லியில் உள்ள இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கும் அவா் செல்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஓ.பன்னீா்செல்வத்துடன் நாடாளுமன்ற உறுப்பினா் ரவீந்திரநாத், சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...