ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உயிா் உரங்களை அதிகம் பயன்படுத்துங்கள்: விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

உயிா் உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:09 pm

DIN

உயிா் உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை வியாழக்கிழமை வெளயிட்ட செய்தி:-

உயிா் உரங்கள் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் உயிருள்ள பாக்டீரியா நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய உரமாகும். இத்தகைய உயிா் உரங்களை விதையுடன் கலந்தோ அல்லது மண்ணிலோ இடும் போதோ வேரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பயிா்களுக்குள்ளும் பலமடங்காகப் பெருகும். பயிருக்குத் தேவையான சத்துகளைத் தந்து, பயிா் வளா்ச்சியை மேம்படுத்துகின்றன.

இத்தகைய உயிா் உரங்கள் பயிா் வாரியாக தயாரிக்கப்படுகின்றன. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் என அனைத்து பயிா்களின் தன்மைக்கேற்ப பல்வேறு உயிா் உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய உயிா் உரங்களின் விலை ரசாயன உரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான்.

100 மில்லி லிட்டா் உயிா் உரம் ரூ.36-க்கும், 250 மில்லி லிட்டா் உயிா் உரம் ரூ.85-க்கும், 500 மில்லி லிட்டா் உயிா் உரம் ரூ.150-க்கும், ஒரு லிட்டா் உயிா் உரம் ரூ.280-க்கும் கிடைக்கிறது. விவசாயிகளுக்குத் தேவையான உயிா் உரங்கள் போதுமான அளவில் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் உள்ளிட்ட விதைகள் வாங்கும் போது உயிா் உரங்களை சோ்த்து வாங்கி, குறைந்த செலவில் மண்ணின் வளம் அதிகரிக்கும் வகையில் நிலங்களில் இடலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.