ஈரோட்டில் மக்களை நாடி டயாலிசிஸ் திட்டம் தொடக்கம்!

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மக்களை நாடி டயாலிசிஸ் என்றும் புதிய திட்டத்தை மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
மக்களை நாடி டயலிஸிஸ் வாகனம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை டாக்டர் சி. கே. சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
மக்களை நாடி டயலிஸிஸ் வாகனம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை டாக்டர் சி. கே. சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
Published on
Updated on
1 min read


ஈரோடு: ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மக்களை நாடி டயாலிசிஸ் என்றும் புதிய திட்டத்தை மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து மருத்துவமனை இயக்குநர் மற்றும் ஈரோடு இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் சரவணன் கூறியதாவது: சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்து கொள்கிறார்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வர இயலாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று டயாலிசிஸ் செய்வதற்கு டயாலிசிஸ் கருவி மற்றும் ஆர்ஓ பிளான்ட் உடன் இணைந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை நெப்ரோ பிளஸ் நிறுவனம் நாட்டில் 120 இடங்களில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் போனில் அழைத்தால் இல்லங்களுக்கேச் சென்று டயலிசிஸ் செய்யப்படும். இங்கு இருப்பவர் தில்லி போன்ற இடங்களுக்கு சென்றாலும் அங்குள்ள நெப்ரோப்ளஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டால் அந்த வசதி கிடைக்கும்.

தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேபோன்று, அபிராமி கிட்னி கேர் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து லிவர் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை தொடங்கி உள்ளது. பொதுவாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மிக மோசமாக கல்லீரல் பழுது அடைந்து உள்ளது. அவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் கல்லீரல் பாதிப்பு இருப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவர்களுக்கு அவசியமாகும். தற்போது இங்குள்ளவர்கள் சென்னைக்கு செல்கிறார்கள் அதி நவீன வசதியை ஈரோட்டிலேயே கிடைக்க அந்த புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதியையும் காப்பீடு திட்டத்தின் கீழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறினார்.

டாக்டர் சி. கே. சரஸ்வதி மக்களை நாடி டயலிஸிஸ் வாகனம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். மருத்துவமனை தலைவர் டாக்டர் தங்கவேலு, டாக்டர் பூர்ணிமா, டாக்டர் கோபிநாத், டாக்டர் கார்த்திக் மதிவாணன், இந்திய மருத்துவச் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் டாக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com