புதுச்சேரி வீதியில் பட்டப்பகலில் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் வியாபாரி! வைரல் விடியோ

புதுச்சேரி மார்க்கெட் வீதியில் பட்டப்பகலில் வியாபாரி ஒருவர் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
புதுச்சேரி மார்க்கெட் வீதியில் பட்டப்பகலில் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் வியாபாரி
புதுச்சேரி மார்க்கெட் வீதியில் பட்டப்பகலில் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் வியாபாரி

புதுச்சேரி மார்க்கெட் வீதியில் பட்டப்பகலில் வியாபாரி ஒருவர் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

புதுச்சேரி பாரதிவீதி நேரு வீதி சந்திப்பில் செயல்பட்டு வருகின்றது குபேர் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் காய்கறி, பூ உள்பட வாழைப்பழ மண்டிகளும், விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இங்குள்ள ஒரு கடையின் வெளியில் வாழைப்பழ தார் பழுக்க மருந்து தெளிக்கும் வீடியோ தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது.

இதில் வீடியோவை எடுத்தவாறு ஒருவர் பேசும்போது, "பாண்டிசேரியே வீணாப் போச்சு.. கலெக்டர் கிட்ட இதப்பத்தி பேசிப்பாக்குறேன். 'எவ்வளவோ பேர் வந்துட்டாங்க ... பார்த்துட்டாங்க .. இதையெல்லாம் யாரால மாத்த முடியும்னு கேட்கிறாங்க'ன்னு கலெக்டர் கிட்ட சொல்றேன், அவர் என்ன பதில் சொல்றாரு பாக்கலாம். 

தவறெல்லாம் ஒரு காலத்தில் மறைமுகமாக செஞ்ச காலம் போயி இன்னைக்கு நேரடியா செய்யுற அளவுக்கு வந்துடுச்சு' என்று வேதனையுடன் தெரிவிக்கின்றார்.

ஆனால் இதனை ஒரு பொருட்டாக எடுக்காத வாழைப்பழ வியாபாரி தொடர்ந்து மருந்துகளை தெளித்து அதனை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். இந்த விடியோ தற்போது வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com