மது போதையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்புப் பகுதிக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே பல்வேறு குடியிருப்புகளும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளன.
மாடக்குளம் பகுதியில் இருந்து பழங்காநத்தம் செல்லும் இந்த பிரதான சாலையில், சிவப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக சாலையில் சென்றுள்ளது.
இந்நிலையில், அரசு மாணவர் விடுதி அருகே வளைவில் வேகமாக காரை ஒட்டியதால், நிலைதடுமாறி காலனி தரிசு என்று சொல்லக்கூடிய பகுதியில் தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.
மேலும் மது போதையில் இருந்த சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பிய நிலையில், காரில் வந்த மற்றொரு நபர் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டுனரின் நண்பர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்த மக்களிடம் சமாதானம் கூறி காரை வேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி காவலர்கள் வருவதற்குள் தப்பிச் சென்றனர்.
மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கக்கூடிய அந்த பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அப்பகுதி மக்கள், மதுபோதையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


