நியாய விலைக் கடைகளை உரிய நேரத்தில் திறக்க தமிழக அரசு உத்தரவு
நியாய விலைக் கடைகளை உரிய நேரத்தில் திறந்து செயல்படுத்த வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.


நியாய விலைக் கடைகளை உரிய நேரத்தில் திறந்து செயல்படுத்த வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.
இதுகுறித்த உத்தரவு: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நியாயவிலைக் கடைகள் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையும், இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் இந்த நேரம் பின்பற்றப்படுவதில்லை. எனவே, மாதாந்திர நியாய விலைக் கடை பணியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்துத் தெரிவித்து, குறித்த நேரத்தில் கடைகளைத் திறந்து செயல்படுத்த உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு தகவல் பலகையில் காட்சிப் படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...