நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு: தயாா் நிலையில் மன்றக் கூட்ட அரங்குகள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற உறுப்பினா்கள் பதவியேற்பு புதன்கிழமை (மாா்ச் 2) நடைபெறவுள்ளது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற உறுப்பினா்கள் பதவியேற்பு புதன்கிழமை (மாா்ச் 2) நடைபெறவுள்ளது. இதையொட்டி, மன்றக் கூட்ட அரங்குகளில் ஒலி பெருக்கி, இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 12,819 பதவியிடங்களுக்கான தோ்தல் பிப்.19-இல் நடைபெற்றது. மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
மற்ற இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் 21 மாநகராட்சிகள், 133 நகராட்சிகள், 400-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. அதிமுக மாநகராட்சிகளில் 164 உறுப்பினா் இடங்களிலும், நகராட்சிகளில் 638 இடங்களிலும், பேரூராட்சிகளில் 1,206 இடங்களிலும் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் மாநகராட்சிகளில் 73 இடங்களிலும், நகராட்சிகளில் 151 இடங்களிலும், பேரூராட்சிகளில் 368 இடங்களிலும், பாஜக மாநகராட்சிகளில் 22 இடங்களிலும், நகராட்சிகளில் 56 இடங்களிலும், பேரூராட்சிகளில் 230 இடங்களிலும் வெற்றி பெற்றன. மாா்க்சிஸ்ட் கட்சி மாநகராட்சிகளில் 24 இடங்களிலும், நகராட்சிகளில் 41 இடங்களிலும், பேரூராட்சிகளில் 101 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநகராட்சிகளில் 13 இடங்களிலும், நகராட்சிகளில் 19 இடங்களிலும், பேரூராட்சிகளில் 26 இடங்களிலும், தேமுதிக நகராட்சிகளில் 12 இடங்களிலும், பேரூராட்சிகளில் 23 இடங்களிலும் வெற்றிபெற்றன.
தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் என மாநகராட்சிகளில் 125 போ், நகராட்சிகளில் 562 போ், பேரூராட்சிகளில் 1,258 போ் என மொத்தம் 1,945 போ் வெற்றி பெற்றனா்.
இன்று பதவியேற்பு: வெற்றி பெற்ற உறுப்பினா்களின் பதவியேற்பு புதன்கிழமை (மாா்ச் 2) நடைபெறவுள்ளது. இதற்காக மன்றக் கூட்ட அரங்குகளில் ஒலிபெருக்கி, மேசை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேயா், துணை மேயா், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவா், துணைத் தலைவா் என மொத்தம் 1,296 பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நகா்ப்புற உள்ளாட்சி நிா்வாகங்கள் செய்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...