தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய புதுச்சேரி மாணவி: ஆளுநர் தமிழிசை வரவேற்பு

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய புதுச்சேரி மாணவி ரோஜா சிவமணியை, மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சால்வை அணிவித்து வரவேற்று நலம் விசாரித்தார்.

News image
உக்ரைனிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்த புதுச்சேரி மாணவி ரோஜா சிவமணியை, நள்ளிரவு 12 மணிக்கு நேரில் சென்று வரவேற்று நலம் விசாரித்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
Updated On :2 மார்ச் 2022, 5:04 am

DIN


உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய புதுச்சேரி மாணவி ரோஜா சிவமணியை, மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சால்வை அணிவித்து வரவேற்று நலம் விசாரித்தார்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் உக்ரைன் நாட்டில் தங்கி மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வருகின்றனர்.

தற்போது அங்கு நடந்து வரும் போர் சூழலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மாணவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து உக்ரைனில் தங்கி படித்து வரும் 23 மாணவ, மாணவிகளையும் பத்திரமாக மீட்க வேண்டுமென்று அந்த மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களில், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவி ரோஜா சிவமணி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அவரை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நள்ளிரவு 12 மணிக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வரவேற்று நலம் விசாரித்தார். 

தொடர்ந்து பிற மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.