சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி 18 வார்டுகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி பேரூராட்சி தேர்தல் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான வ.சுலைமான் சேட் தலைமை வகித்து புதிதாக வெற்றி பெற்ற 1வது வார்டு உறுப்பினர் ஆர்.அருணா, 2வது வார்டு பி.சத்யா, 3வது வார்டு ச.கவிதா, 4வது வார்டு மு.மணிமொழி, 5வது வார்டு ச.ப. நிர்மலா, 6வது வார்டு கோ.சுமங்கலா, 7வது வார்டு இரா.வ.அருண்பிரபு, 8வது வார்டு செ.சின்னபொன்னு, 9வது வார்டு கி.சண்முகம், 10வது வார்டு சொ.கனகராஜ், 11வது வார்டு ச.பா.முருகேசன், 12வது வார்டு க.கீதா, 13வது வார்டு ஆ.மாணிக்கம், 14வது வார்டு கு.கவிதா, 15வது வார்டு ரா.சந்திரா, 16வது வார்டு சு.வே.கௌசல்யாஸ்ரீ, 17வது வார்டு வெ.கங்காதேவி, 18வது வார்டு சி.குமார் ஆகியோர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாக வெற்றி பெற்றவர்களுக்கு சின்னாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பி.தங்கமுத்து, திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம், முன்னாள் பால்வளத்தலைவர் எம்.சின்னதம்பி, நகரச் செயலர் (பொ) சுப்ரமணியம், முன்னாள் நகரச் செயலர் முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அத்தியண்ணன், பேரூராட்சி கவுன்சிலர் பி.செல்வராஜ், அரசு வழக்குரைஞர் ஆர்.அருள்பிரகாஷ், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


