நீடாமங்கலம் காவல்நிலைய நூற்றாண்டு விழா
நீடாமங்கலம் காவல் நிலைய நூற்றாண்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.


நீடாமங்கலம்: நீடாமங்கலம் காவல் நிலைய நூற்றாண்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசந்தர் தலைமை வகித்தார். நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சீதாலெட்சுமி, காவல் துணைக் கண்காணிப்பாளர்(பயிற்சி) இமயவரம்பன், வட்டாட்சியர் ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நீடாமங்கலம் ஒன்றியக் குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், கூடுதல் ஆணையர் அன்பழகன், நகர வர்த்தகர் சங்க தலைவர் அசோகன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் செந்தமிழ்ச் செல்வன், ஊராட்சிமன்ற தலைவர் கைலாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் காவல்உதவி ஆய்வாளர்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள், பள்ளி மாணவர்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக உதவி ஆய்வாளர் விவேகானந்தன் வரவேற்றார். முடிவில் நீடாமங்கலம் காவல்ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...