ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
ஈரோடு மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற 60 மாமன்ற உறுப்பினர்களில் 54 உறுப்பினர்கள் , ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் ஆணையர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் கலந்து கொண்டனர். இதற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் இருந்தது.
50 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற நாகரத்தினம் மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அறிவித்தார் .
தொடர்ந்து மேயராக வெற்றி பெற்ற நாகரத்துனத்துக்கு செங்கோல் வழங்கி மேயர் பதவிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


