கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தமிழகத்தை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரவுள்ளது.

News image
Updated On :5 மார்ச் 2022, 6:02 pm

DIN

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இதன் காரணமாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சனிக்கிழமை கூறியது:

தென்கிழக்கு வங்கக்கடலில் மாா்ச் 1-ஆம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நிலைகொண்டிருந்தது. இது சனிக்கிழமை மாலை அதே பகுதியில், வட தமிழக கடலோர பகுதியில் இருந்து சுமாா் 300 கி.மீ. தொலைவில் அதாவது, நாகப்பட்டினத்துக்கு கிழக்கு-வடகிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன்காரணமாக, கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் 20 மி.மீ., திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினம், கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னாா்

வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மாா்ச் 7-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.