சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை: முதல்வர் மு.க. ஸ்டாலின் (விடியோ)

எங்கு சிறு தவறு நடந்தாலும், அதை நான் கண்காணித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பேன் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 மார்ச் 2022, 4:57 pm

DIN


எங்கு சிறு தவறு நடந்தாலும், அதை நான் கண்காணித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பேன் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கருணாநிதி சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Story image

அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

"உள்ளாட்சித் தேர்தல் நாம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறோம். அதைக் காண கருணாநிதி இல்லை என்கிற ஏக்கம் என்னிடத்தில் உள்ளது.

வெற்றிக்குப் பிறகு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
 
எங்காவது சிறு தவறு நடந்தாலும் அதை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பேன். கண்காணிப்பது மட்டுமில்லாமல், உரிய நடவடிக்கையையும் உடனடியாக எடுப்பேன். அது அச்சுறுத்துவதற்காக அல்ல. மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக.

நம்முடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு சில இடங்களை ஒதுக்கி, அவர்களிடத்தில் அதை நாம் ஒப்படைத்தோம். ஆனால், ஒரு சில இடங்களில் தவறு நடந்தது. அந்தத் தவறுக்காக நான் வருத்தப்பட்டு, கூனி குறுகி நிற்கிறேன்.

அந்தத் தவறை செய்தவர்கள் உடனடியாக திருந்தி ராஜிநாமா செய்து என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று கூறியது உங்களுக்குத் தெரியும். இது செய்திக்காக அல்ல. கூட்டணிக் கட்சியில் உள்ளவர்களை திருப்திப்படுத்துவதற்காக அல்ல. தவறு செய்வதர்களை மிரட்டுவதற்காக அல்ல. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அண்ணா கூறியிருக்கிறார். கடமையைவிட கண்ணியத்தைவிட கட்சிக்கு கட்டுப்பாடுதான் ரொம்ப முக்கியம், அதைக் கட்சித் தோழர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கருணாநிதி கூறியிருக்கிறார்.

நமக்கு மேலும் சிறப்புகள், பாராட்டுகள், வெற்றிகள் பெருக வேண்டும் என்றால், அதற்கு உள்ளாட்சிதான் காரணமாக இருக்கும். 

உள்ளாட்சியில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்வதோடு இது நில்லாமல், அடுத்த 6 மாதங்களில் உங்களுக்கு நான் பாராட்டு சொல்லக்கூடிய அளவுக்கு செயல்பாடுகள் இருக்க வேண்டும்."

Story image

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.