நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மகளிரணி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். பெண்களின் முன்னேற்றத்திற்கு திமுக பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.
ஆண்களை விட பெண்களே அதிக அளவில் கல்வி பயில்கின்றனர். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளோம் என்று கூறினார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.