டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழகத்தில் இன்று 24-வது மெகா தடுப்பூசி முகாம்: 50,000 இடங்களில் நடைபெறுகிறது

தமிழகம் முழுவதும் இன்று 24 ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:38 am

DIN

தமிழகம் முழுவதும் இன்று 24 ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு சனிக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 24 ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும் 70.4 % பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தகுதியான 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.