புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கீழ்வேளூர் அருகே ஆந்தக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

ஆந்தக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகம் .

Updated On :13 மார்ச் 2022, 7:47 am

கீழ்வேளூர் அருகே ஆந்தக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Story image

ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே ஆந்தக்குடியில் ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம் நடைப்பெற்றது. 

Story image

அதனைத்தொடர்ந்து  வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜை  நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை  சுமந்து கோயிலை வலம் வந்து  பூர்ண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ ஹரகஹரபுத்ர ஐயனார், ஸ்ரீ பிடாரி அம்பாள் மற்றும் ஸ்ரீ வீரனார் ஆலய  கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Story image

மஹா கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

அதனைத்தொடரந்து அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி ஐயனாரை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.