பணியின்போது அரசு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்துவது நல்லதல்ல: உயர் நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: பணி நேரத்தில், அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்லிடப்பேசியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
பணியின்போது செல்லிடப்பேசியில் விடியோ எடுத்த அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்லிடப்பேசியில் பேசுவது மற்றும் விடியோ எடுப்பது நல்ல நடவடிக்கை அல்ல.
இதையும் படிக்க.. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி
பணி நேரத்தில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி, மருத்துவத் துறை செயலாளர் உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருப்பதோடு, உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை 4 வாரங்களுக்குள் முடிவுக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அலுவலக பயன்பாட்டுக்கு என அரசு ஊழியர்கள் தனி செல்லிடப்பேசி அல்லது தொலைபேசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.