நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் பேரறிவாளன் விடுவிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :15 மார்ச் 2022, 8:25 pm

DIN

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவால் பேரறிவாளன் கடந்த 1991 ஜூன் 11-இல் கைது செய்யப்பட்டாா். கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இதற்கிடையே, சிறப்பு நீதிமன்றத்தினால் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 2014 பிப்ரவரி 14-ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பின்னா், அவ்வப்போது பரோலில் வெளிவந்த பேரறிவாளன், கடந்த 9 மாதங்களாக பரோலில் ஜோலாா்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து வந்தாா்.

இதனிடையே, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காததால் பேரறிவாளன் பரோலில் தொடா்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு, புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து பேரறிவாளன் ஜோலாா்பேட்டையில் இருந்து செவ்வாய்க்கிழமை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டாா். பல்வேறு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னா் பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளனை தாயாா் அற்புதம்மாள் ஆரத்தழுவி வரவேற்றாா்.

‘பேரறிவாளனுக்கு பிணை ஒரு இடைக்கால நிவாரணம்தான். நீதிக்கான எங்களது போராட்டம் தொடரும். எங்களது போராட்டத்துக்கு துணை நிற்கும் தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பேரறிவாளனுக்கு பிணை கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நெஞ்சாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அற்புதம்மாள் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.