எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் மீண்டும் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் மீண்டும் சோதனை
எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் மீண்டும் சோதனை


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமானத்தை விட கூடுதலாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்து எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் இன்று காலை சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார். இவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கோவை, நாமக்கல், திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கேரள மாநிலத்திலும் என சுமார் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவர் தனது பதவிக் காலத்தில், வருமானத்தை விட ரூ.58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கூடுதலாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி. வேலுமணி வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், எஸ்.பி. வேலுமணியின் குடும்பத்தினர் உள்ளிட்ட 13 பேர் மீது கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்திருக்கும் வழக்கில், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் வருமானத்தை விட 3,928%  கூடுதலாக சொத்து சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று கோவையில் எஸ்.பி. வேலுமணி வீடு, அவரது உதவியாளர் சந்தோஷ் வீடு உள்ளிட்ட 41 இடங்களிலும், செனனையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்களிலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 1  இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும் என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com