சிறப்பாக நிறைவுபெற்றது மயிலாப்பூர் பங்குனி திருவிழா: காவல்துறை

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக நிறைவடைந்தது, ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக நிறைவுபெற்றது மயிலாப்பூர் பங்குனி திருவிழா: காவல்துறை
சிறப்பாக நிறைவுபெற்றது மயிலாப்பூர் பங்குனி திருவிழா: காவல்துறை

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக நிறைவடைந்தது, ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குனி தேர்திருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவின் போது காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததால் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் நடைபெறாமல் சிறப்பாக திருவிழா நிறைவடைந்தது.

சென்னை மாநகரத்தில் முக்கிய பெருவிழாவான மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி பெரு விழாவானது 2022 ஆம் ஆண்டு மார்ச் 09 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது,

இப்பங்குனி பெருவிழாவில் மிக முக்கிய விழாக்களான தேர் திருவிழா கடந்த 15ஆம் தேதியும் 63 நாயன்மார்கள் திருவிழாவானது நேற்று நடைபெற்றது, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இத்திருவிழாவில் 1500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், 1 இணை ஆணையாளர், 5 துணை ஆணையாளர்கள் மற்றும் 1500க்கு மேற்பட்ட காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், இத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களும். பொதுமக்களும் வசதியாக சாமியை தரிசனம் செய்வதற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மேலும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பாடாமல் இருக்க வாகனங்களை நிறுத்துவதற்கும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்தும் சிறப்பான ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறையினர் செய்தனர், கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, திருத்தேர் விழாவின்போது தேருடன் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு கூட்ட நெரிசல் ஏற்படாமலும.; பொதுமக்கள் சாமி தரிசனத்தை நல்ல முறையில் செய்திடவும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அறுபத்து மூவர் திருவிழாவின் போது ஒவ்வொரு பல்லக்குடனும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்கள் தரினத்திற்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

கோவிலினை சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளிலும் காவல் துறையின் 4 உதவி மையங்கள் அமைக்கப்பட்டது, கோவிலை சுற்றி நான்கு மாடவீதிகளிலும் 32 சிசிடிவி கேமராக்களும். கோவிலின் உள்ளே 36 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 68 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது, திருக்கோவிலின் உள்ளே 4 காவல் கண்காணிப்பு கோபுரங்களும், கோவிலுக்கு வெளியே 4 மாடவீதிகளில் 10 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் என மொத்தம் 14 காவல் காண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி சுமார் 75.000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக தேரோட்டத்தினில் கலந்து கொண்டார்கள். அதே போன்று நேற்று  நடைபெற்ற அறுபத்துமூவர் திருவிழாவின்போது ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். மேற்படி தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவின் போது காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததால் எவ்வித அசம்பாவித நிகழ்வுகளும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் நடைபெறாமல் பொதுமக்களின் ஒத்துழைப்பினால் சிறப்பாக திருவிழா நிறைவடைந்தது, ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக நன்றி தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com