‘பணிநேரத்தில் காவல்துறையினர் செல்போன் பயன்படுத்தக் கூடாது’

பணிநேரத்தில் காவல்துறையினர் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, அலுவலகத்தில் சக பணியாளரை செல்போன் கேமிரா மூலம் விடியோ எடுத்தவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், அலுவலகங்களில் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், பணிநேரத்தில் காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் செல்போன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல்துறை ஆணையர் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com