அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

எடப்பாடியில் பங்குனி உத்திர விழா: ஞான கந்த சுவாமி  திருக்கல்யாண வைபவம்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அடுத்த கல்லபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஞானகந்தசாமி திருக்கோயிலில், திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. 

News image
மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானை உடனுரை ஞானகந்தசாமி
Updated On :18 மார்ச் 2022, 3:38 am

DIN


எடப்பாடி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அடுத்த கல்லபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஞானகந்தசாமி திருக்கோயிலில், திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. 

இத்திருக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சிறப்பு பூஜைகளை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை ஞான கந்தசாமி திருக்கல்யாண நிகழ்வு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. 

ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மணவரை கூடத்தில் பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றன. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஞான கந்தசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

Story image

எடப்பாடி அருகே நடைபெற்ற வள்ளி, தெய்வானை உடனுரை ஞானகந்தசாமி திருக்கல்யாண வைபவ நிகழ்வு.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமிக்கு பூஜிக்கப்பட்ட மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முத்து ரதத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முத்து ரதத்தினை வடம் பிடித்து இழுத்துவந்தனர். காவடி சுமந்த பக்தர்கள் முருகனைப் போற்றிப் பாடி ஆடியவாறு கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Story image

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மூலவர் ஞான கந்தசுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஞான கந்தசாமி கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.