சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

2 மாதமாக குடிநீர் வரவில்லை: வளையப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
குடிநீர் கேட்டு பேரையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வளையப்பட்டி கிராம மக்கள்.
Updated On :18 மார்ச் 2022, 3:17 am

DIN


உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வலையபட்டி கிராமத்தில் இரண்டு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.

இந்நிலையில், உசிலம்பட்டி பேரையூர் சாலையில் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் உசிலம்பட்டி நகர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். 

காலை நேரம் சாலை மறியல் ஏற்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அப்பகுதியிலிருந்து உசிலம்பட்டிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்தே சென்றனர். சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.