நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
விவாகரத்து மனுவில் விஜய் மீது சங்கீதா திருமணம் மீறிய உறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையே முன்வைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர். குறிப்பாக தவெக தொண்டர்கள், சங்கீதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் சங்கீதாவை இழிவாக விமர்சனம் செய்வோருக்கு தமிழ்நாடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
மாதர் சங்கத்தின் தலைவர் ஜி.பிரமிளா, பொதுச் செயலாளர் அ.ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"தவெக தலைவர் விஜய் இணையர் சங்கீதா மீது, தவெக தொண்டர்களின் சமூக வலைதள தாக்குதலையும் அதை கண்டிக்காமல் மௌனம் காக்கும் விஜய்க்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.
திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில், விஜய்யின் இணையர் சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில், விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை ஆகும்.
அது இரு நபர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் உரிய விஷயமே தவிர, அதை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி, ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
ஆனால், விஜய்யின் பெயரைச் சொல்லிக் கொண்டு இயங்கும் அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சங்கீதாவை குறிவைத்து, ஆபாசமான, இழிவான ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை பதிவுகள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
இது கருத்துச் சுதந்திரமல்ல – பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை. பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை – பொது சொத்து அல்ல ஒரு பெண், தனது திருமண வாழ்க்கை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது, அப்பெண்ணை அவமதிக்கவோ, கேலி செய்யவோ, பாலியல் இழிவுக்கு உள்ளாக்கவோ யாருக்கும் உரிமை இல்லை.
விவாகரத்து என்பது, அடிப்படை மனித உரிமை என்பதை மறந்து, பெண்களை இழிவுபடுத்தும் போக்கு, ஆழமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும்.
திரைப்பட நடிகராக இருப்பது ஒரு தனிப்பட்ட தொழில். ஆனால் அரசியல் கட்சி தொடங்கி, மக்களிடம் ஆதரவு கோரும்போது, அந்த நபர் பொது வாழ்வின் நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக மாறுகிறார். இந்த நிலையில், விஜய்யின் பெயரை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துவது குறிப்பாக சங்கீதாவை ஆபாசப்படுத்தி பதிவுகள் பரவும்போது அதை கண்டிக்காமல் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. அந்த மௌனம், அந்த செயல்களுக்கு மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும்.
எனவே, ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க சமூக வலைதள வன்முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு அரசியல் கட்சி தலைவரின் அரசியல் – சமூக பொறுப்பு. இத்தகைய வலைதள வன்முறைக்கு மௌனம் காப்பதும் குற்றத்திற்குச் சமமானதாகும்.
சங்கீதா மீது சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை, ஆபாச, இழிவான தாக்குதல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.
பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல்–பொழுதுபோக்கு விவாதமாக மாற்றும் போக்கை எதிர்க்கிறது. பொது வாழ்வில் இருப்பவர்கள், பெண்களை இழிவுபடுத்தும் செயல்களுக்கு எதிராக தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
பெண்களின் மரியாதை, சமத்துவம், சுதந்திரம் ஆகியவை எந்த அரசியல் ஆதரவுக்கும், ரசிக மன நிலைக்கு பலியாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை தடுத்து நிறுத்த காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
சங்கீதா மீது ஆபாச அவதூறு பரப்புபவர்கள் மீது தவெக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்த ஆபாச பிரச்சாரத்தை கண்டித்து எதிர்வினை ஆற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
summary
AIDWA women association condemns Vijay's silence on criticism of Sangeetha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மீடியாவை சந்திக்கும் சங்கீதா?

வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா மனு!

இஸ்லாமியர் நலன்களுக்கு துரோகம் செய்யும் ஒஐசி: மெஹபூபா கண்டனம்!

விவாகரத்து கோரும் விஜய் மனைவி சங்கீதா!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

