ஆட்சி நிர்வாகம் இவர் முதலமைச்சராக இருந்தபோது எப்படித் திண்டாடியிருக்கும் என்பது இப்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது! உழவர்கள் தற்கொலை, உழவர்களின் “கிசான் இன்சூரன்ஸ்” திட்டத்தில் முறைகேடு, உழவர்கள் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடையுத்தரவு வாங்கியது- உழவர்களை வஞ்சிக்கும்- உழவுத் தொழிலை அடியோடு பாதிக்கும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து- வாக்களித்து- வக்காலத்து வாங்கியது- மேட்டூர் அணையைத் திறந்துவிட்டு விட்டு, பிறகு தூர்வாருகிறோம் என்று “முறைகேடு”, குடிமராமத்து ஊழல்- இப்படி ஒரு ஆட்சியை நடத்திய பழனிசாமி, “தனது உழவர் விரோத ஆட்சியை வேளாண் பெருங்குடி மக்களின் பொற்காலம்” என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார் என்றால்- பொய் சொல்வதில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நிகர் அவரேதான் என்பதில் சந்தேகமில்லை!