அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

'தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்’ - பேரவையில் முதல்வர் பதில்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். 

News image
Updated On :22 மார்ச் 2022, 12:53 pm

DIN

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். 

தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக எம்எல்ஏ கூறியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுப் பதில் அளித்தார். 

அப்போது பேசிய முதல்வர், 'அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒரு பெரிய பட்டியலை வரிசைப்படுத்தி, இதையெல்லாம் தேர்தல் அறிக்கையிலே சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை, ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார்.  நீங்கள் தொடர்ந்து இரண்டு முறை, அதாவது 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள்.  நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் முழுமையாக செய்து முடித்து விட்டீர்களா?

அப்படிச் செய்து முடித்திருந்தால், சொல்லுங்கள்.  பல வாக்குறுதிகளை நீங்கள் அந்த 10 வருடங்களில் நிறைவேற்றவேயில்லை.  அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன; அது மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.  

நான் இப்போது சொல்கிறேன்.  நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கக்கூடிய வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை, அதிலும் குறிப்பாக இந்த 10 மாதங்களில், நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்பதை நான் உறுதியோடு சொல்ல முடியும். 

விரைவிலே, நீங்கள் என்னென்ன வாக்குறுதிகளைக் கேட்டிருக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பட்ஜெட்டிலும் சொல்லியிருக்கிறோம். எனவே, நிச்சயமாக, உறுதியாக, படிப்படியாக அவை நிறைவேற்றப்படும். அதுதான் எங்களுடைய இலட்சியம், அதுதான் எங்களுடைய கொள்கை' என்று பேசியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.