சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 76  காசுகள் உயர்வு

சென்னையில் 3 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை முறையே லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ளது. 

கோப்புப்படம்

Published On :

சென்னையில் நான்கு நாள்களில் 3 ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை முறையே லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு நவ. 3-ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து, நவ. 4-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

அண்மையில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது.

தோ்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்களை கடந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 80 காசுகள் அதிகரித்து அரசுக்குச் சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அறிவிக்கை வெளியிட்டன.

இதையடுத்து, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை தில்லியில் ரூ.96.21, மும்பையில் ரூ.110.82-ஆக அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.102.16-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை இரண்டாவது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91 ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.92.95 ஆக உயர்ந்துள்ளது.  , டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 3 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை முறையே லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ளது. 

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.93.71 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த நான்கே நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.27 காசுகளும், டீசல் ரூ.2.28 காசுகளும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து எரிப்பொருள்களின் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.