வாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலிருந்தும் ரிஷப் பந்த் விலகல்!

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

Rishabh Pant

ரிஷப் பந்த் - படம் | AP

Updated On :

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பிரதான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள் தங்களுக்குள் மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலிருந்து விலகிய ரிஷப் பந்த், மூன்றாவது போட்டியிலிருந்தும் விலகியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார். ரிஷப் பந்த் நல்ல உடல்தகுதி பெற்றுள்ளபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மூன்றாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெறாத ரிஷப் பந்த், டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடவுள்ளார். பிரதான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக காயம் ஏதும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அவர் மூன்றாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 19 ஆம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

Summary

Rishabh Pant has withdrawn from the third unofficial Test match against the New Zealand A team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.