இந்தியா ஏ அணி: காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகல்! குமார் குஷாக்ரா சேர்ப்பு!
இந்தியா - ஏ அணியில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பந்துக்கு பதிலாக குமார் குஷாக்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

குமார் குஷாக்ரா / ரிஷப் பந்த்
இந்தியா - ஏ அணியில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பந்துக்கு பதிலாக குமார் குஷாக்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 'ஏ' அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவாரா என்பது அவரது உடல் தகுதியைப் பொறுத்தே அமயும் என கூறப்பட்டது. இந்த நிலையில், முதல் இரண்டு போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.
இரானி கோப்பைப் போட்டியில் 'ரெஸ்ட் ஆஃப் இந்தியா' அணியை வழிநடத்தியபோது, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பந்துக்கு இடது பக்கவாட்டுத் தசையில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவர் நன்றாக குணமடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் அணியில் பந்திற்குப் பதிலாக குமார் குஷாக்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா 'ஏ' அணி பட்டியல்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் ஸ்மரன், துருவ் ஜூரல் [கேப்டன்] [விக்கெட் கீப்பர்], வாஷிங்டன் சுந்தர், ஆகிப் நபி, ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ், மானவ் சுதர், முகேஷ் சௌத்ரி, சாய் சுதர்சன், யாஷ் ரத்தோடு, முகேஷ் குமார், குமார் குஷாக்ரா [விக்கெட் கீப்பர்] (முதல் இரு போட்டிகளுக்கு).
Summary
India A Team: Rishabh Pant withdraws due to injury! Kumar Kushagra added!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


