இந்திய வீரர் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்ஸர்கள் அடித்து புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவில் இருந்து முதல் வீரராக 100 சிக்ஸர்களை அடித்தவராகவும் சாதனை படைத்துள்ளார்.
காலேவில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் குவிக்க, இலங்கை அணி 284 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி வெற்றி பெற 372 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பாக ரிஷப் பந்த் அதிகபட்ச ரன்களை குவித்தார். அவர் 69 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கியுள்ளன.
இந்த 2 சிக்ஸர்களுடன் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக இந்த சாதனையை படைத்த முதல் வீரராக ரிஷப் பந்த் முன்னேறியுள்ளார்.
டெஸ்ட்டில் 100 சிக்ஸர்கள் அடித்தவர்கள் (இன்னிங்ஸ் வாரியாக)
ரிஷப் பந்த் - 89 இன்னிங்ஸ்
ஆடம் கில்கிறிஸ்ட் - 130 இன்னிங்ஸ்
பென் ஸ்டோக்ஸ் - 151 இன்னிங்ஸ்
பிரண்டன் மெக்கல்லம் - 170 இன்னிங்ஸ்
Rishabh Pant stepped out and sent that one straight into the Galle skyline. ð
— Sony Sports Network (@SonySportsNetwk) August 18, 2026
Watch #SLvIND, 1st Test | Day 4, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #SonyLIV #BeautifulGameOfTestCricket pic.twitter.com/rqOJoGZChq
Summary
Indian batter Rishabh Pant create history in Test Cricket
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜோஷ் ஹேசில்வுட்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!
ஒரு வீடு வேண்டும்! நள்ளிரவில் உத்தரகண்ட் முதல்வரிடம் ரிஷப் பந்த் கோரிக்கை
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



