புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

2-வது டெஸ்ட்: ரிஷப் பந்த்துக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ரிஷப் பந்த்துக்கு காயம் ஏற்பட்டது.

Rishabh Pant

ரிஷப் பந்த் - படம் | AP

Published On :

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ரிஷப் பந்த்துக்கு காயம் ஏற்பட்டது.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல், இரண்டாவது போட்டியிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி அசத்தினார். அவர் 193 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஷுப்மன் கில் 50 ரன்கள், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள், கே.எல்.ராகுல் 18 ரன்கள் எடுத்தனர்.

விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் விளையாடும்போது, இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லகிரு குமாரா வீசிய பந்து, ரிஷப் பந்த்தின் இடது கையில் பலமாக பட்டது. அவர் வலியில் துடிப்பதை பார்க்க முடிந்தது. வலியின் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இதனால், 15 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பந்த் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

ரிஷப் பந்த்துக்கு கையில் அடிபட்டது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையக் கூடுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Summary

Rishabh Pant sustained an injury during the second Test match against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.