
இரண்டாவது டெஸ்ட்: பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறுவாரா? மாட்டாரா?
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குல்தீப் யாதவ் - (கோப்புப் படம்)
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நாளை (ஆகஸ்ட் 23) தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்களான மானவ் சுதர் மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசினர். மானவ் சுதர் 10 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பிளேயிங் லெவனில் இடம்பெற்ற மூத்த வீரர் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டினை மட்டுமே கைப்பற்றினார். முதல் போட்டியில் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதில் குல்தீப் யாதவ் கவனம் கொடுக்க வேண்டும் எனவும், விக்கெட் கண்டிப்பாக வீழ்த்தியாகவே வேண்டும் என்ற அழுத்தத்தை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை எனவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: குல்தீப் யாதவ் எவ்வளவு திறமையான பந்துவீச்சாளர் என்பது நமக்குத் தெரியும். விக்கெட் எடுக்க வேண்டும் என அவரிடம் கூறுவேன். ஆனால், கண்டிப்பாக விக்கெட் வீழ்த்தியாக வேண்டும் என்ற அழுத்தத்தை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. விக்கெட் வீழ்த்தியாக வேண்டும் என்ற அழுத்தத்துடன் விளையாடினால், பந்துவீச்சு கட்டுப்பாட்டை இழக்கவும் நேரிடும்.
குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர். ஆனால், நான் ஏற்கனெவே கூறியதுபோல ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறே இந்திய அணியின் சிறந்த பிளேயிங் லெவனை முயற்சி செய்வோம் என்றார்.
இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக ஆஃப் ஸ்பின்னர் சரண்ஷ் ஜெயின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
Summary
Doubts have arisen as to whether Kuldeep Yadav will be included in the Indian playing XI for the second Test match against Sri Lanka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





