தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

இந்திய டெஸ்ட் தொடர்: நியூசி. பேட்டிங் பயிற்சியாளராக பி.ஜே. வாட்லிங் நியமனம்!

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பி.ஜே. வாட்லிங் நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

பி.ஜே. வாட்லிங். - @BLACKCAPS

Published On :8 அக்டோபர் 2026, 12:49 pm IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்டர் பி.ஜே. வாட்லிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஐந்து டி20, 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கி டிச. 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் தொடர் நவ. 19 ஆம் தேதி வெல்லிங்டனில் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் பி.ஜே. வாட்லிங் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் லுக் ராஞ்சியின் குழுவினருடன் பி.ஜே. வாட்லிங் வருகிற நவ. 16-ல் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யும்போது, ​​வாட்லிங் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அனுபவமிக்கவரான பி.ஜே. வாட்லிங், நியூசிலாந்து அணிக்காக 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3790 ரன்கள் குவித்துள்ளார். அதில், எட்டு சதங்கள், 19 அரைசதங்களையும் விளாசியுள்ளார். இதுவரை எந்தவொரு நியூசிலாந்து வீரரும் எட்டாத வகையில் விக்கெட் கீப்பராக மட்டும் 3400 ரன்களக் குவித்துள்ளார்.

மேலும், விக்கெட் கீப்பராக ஸ்டம்ஸ்களுக்குப் பின்னால் 265 பேரை அவுட்டாக்கிய தேசிய சாதனையையும் அவர் பெற்றுள்ளார். 2021-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, இந்திய அணியை வீழ்த்தி முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நியூசிலாந்து அணியிலும் அவர் அங்கம் வகித்தது நினைவுகூரத்தக்கது.

Summary

Former New Zealand wicketkeeper-batter BJ Watling is set to succeed Luke Ronchi as the Blackcaps’ batting coach following New Zealand’s ICC World Test Championship 2025-27 Test series against India, scheduled to begin in early December.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.