கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வுகச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது பற்றி...

India vs New Zealand 1st Test Day 5: Glenn Phillips, Daryl Mitchell help New Zealand draw

நியூசிலாந்து வீரர்கள்.

Updated On :

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடா்களை கைப்பற்றியுள்ளது. இதன் தொடா்ச்சியாக இரண்டு ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 121 ஓவர்களில் 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஹென்றி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காமல் 175 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 118 ரன்களும் குவித்து அணியை மீட்டனர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 720 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்தியத் தரப்பில் கே.எல். ராகுல் (136), ரிஷப் பந்த் (128) ஆகியோர் சதமடித்தனர். ஷுபமன் கில் (98), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (85), தேவ்தத் படிக்கல் (80) ஆகியோரும் சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்கு 352 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து, 4-ஆம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. கடைசிநாளான இன்று எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி எட்ட இந்திய வீரர்கள் தீவிரம் காட்டினர். நியூசிலாந்து பேட்டர்கள் நங்கூரமிட்டு களத்தில் நின்றனர். இந்திய அணியால் 75 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. குறிப்பாக, 6-ஆவது விக்கெட்டிற்கு இணைந்த டேரில் மிட்செல் (49* ரன்கள்) மற்றும் கிளென் பிலிப்ஸ் (26* ) ஆகியோர் 258 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

இந்தியத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 120 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்திருந்தபோது, அந்த அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத சூழலில் போட்டியை டிராவில் முடித்துக்கொள்ள இரு அணிகளும் சம்மதித்தன. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Summary

New Zealand batters Daryl Mitchell and Glenn Phillips dug in to frustrate India as the visitors reached 206 for five at tea on the final day of the opening Test on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.