வெலிங்டன் டெஸ்ட்: முதல் செஷனில் முந்திய இந்தியா; கடைசி இரு செஷன்களில் நியூசிலாந்து ஆதிக்கம்!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான வெலிங்டன் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் குறித்து...

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பும்ரா, சதம் அடித்த கொண்டாட்டத்தில் ஹென்றி நிகோலஸ். - படங்கள்: ஏபி
வெலிங்டனில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 82 ஓவர்களில் முடிவுக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
டாஸ் வென்ற இந்தியாவின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதற்கேற்ப முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே டாம் லாதம் விக்கெட்டை ஜஸ்ப்ரீத் பும்ரா வீழ்த்தினார்.
அடுத்ததாக நான்காவது ஓவரில் அன்ஷுல் கம்போஜ் கான்வே விக்கெட்டை வீழ்த்த, ஆகாஷ் தீப் 20ஆவது ஓவரில் ரச்சின் ரவீந்திராவை வீழ்த்தினார்.
பின்னர் மீண்டும் பும்ரா தனது மேஜிக்கை நிகழ்த்தி, டேரில் மிட்செல் மற்றும் டாம் பிளண்டெல் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் தொடக்கத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
பின்னர், ஹென்றி நிகோலஸ் மற்றும் க்ளென் பிலிப்ஸ் கூட்டணி 322 பந்துகள் விளையாடி 173 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் முதல் நாளை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். நியூசிலாந்து 82 ஓவர்களுக்கு 243/5 ரன்கள் குவித்துள்ளது.
ஹென்றி நிகோலஸ் 113*, க்ளென் பிலிப்ஸ் 94* ரன்கள் எடுத்துள்ளார்கள். இந்தக் கூட்டணி இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பறித்தது என்று வர்ணனையாளர்கள் கூறினார்கள்.
இந்தியாவின் சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். முதல் செஷனில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும் மற்ற இரு செஷன்களிலும் நியூசிலாந்து கம்பேக் அளித்து அசத்தியது.
முதல் செஷன்: 60 ரன்கள், 4 விக்கெட்டுகள்.
இரண்டாவது செஷன்: 80 ரன்கள், ஒரு விக்கெட்.
மூன்றாவது செஷன்: 103 ரன்கள், விக்கெட் ஏதுமில்லை.
Stumps on Day 1ï¸â£
— BCCI (@BCCI) November 19, 2026
Jasprit Bumrah leads #TeamIndia's bowling effort on the opening day of the series with 3ï¸â£ wickets âï¸
Scorecard â¶ï¸ https://t.co/SaMcNXtAVG#NZvIND pic.twitter.com/JM6CpHQLmL
Summary
Wellington Test: India dominates the first session, while New Zealand holds sway in the other two!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


