தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் துபை பயணம் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர் அண்ணாமலை என்றும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் துபை பயணத்தை அவர் கடுமையாக விமரிசித்துள்ளார் என்றும் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டினார். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக செயல்பட்டு வரும் மு.க. ஸ்டாலின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை பொய் கருத்துகளை பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரை அவதூறாக பேசியதைக் கண்டித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆர்.எஸ். பாரதி எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புதிய தமிழகம் கட்சி 10-15 தொகுதிகளில் வெல்லும்: கே. கிருஷ்ணசாமி

விளவங்கோடு தொகுதியில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வளா்ச்சிப் பணிகள் செய்துள்ளேன்: பாஜக வேட்பாளா் விஜயதரணி
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


