நாளை 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்: தொ.மு.ச அறிவிப்பு

நாளை போராட்டம் தொடர்ந்தாலும் 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில்,
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாளை போராட்டம் தொடர்ந்தாலும் 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், தொ.மு.ச பொருளாளர் நடராஜன் சென்னையில் அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

பொதுமக்களின் நலன் கருதி நாளை வழக்கம்போல் அத்தியாவசிய பனிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

முன்னணி நிர்வாகிகள் மட்டும் நாளைய போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.

அதன்படி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொதுவேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை தொடங்கியது. வேலைநிறுத்தம் காரணம் சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை.

தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவிலை என்று போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 10 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com