தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 400-க்கு கீழ் குறைவு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை செவ்வாய்க் கிழமை (மார்ச் 29) 339 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 400-க்கு கீழ் குறைவு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை செவ்வாய்க் கிழமை (மார்ச் 29) 339 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 33 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.  அதில், இன்று புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,52,751-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை  34,14,387-ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 25,105 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com