
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து மெட்ரோ பயணிகளின் நலனுக்காக இலவச பொது சுகாதார மருத்துவ முகாமை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்தி வருகிறது.
மார்ச் மாதம் நடைபெற்ற மருத்துவ முகாமில் 796பேர் பயனடைந்துள்ளனர். இதில், எடை, இரத்த அழுத்தம், சீரற்ற சர்க்கரை, வெப்பநிலை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்களை கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி தொடர்ந்து நடத்தவிருக்கிறது.
மெட்ரோ ரயில் பயணிகள் இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.