11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பிரதமருடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது: மு.க.ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மன நிறைவுடன் அமைந்ததாக தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 மார்ச் 2022, 1:41 pm

பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மன நிறைவுடன் அமைந்ததாக தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது மாநிலத் தேவைகள் மற்றும் உரிமைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு மனநிறைவுடன் அமைந்ததாகக் கூறினார். 

மேலும், மோடி மற்றும் அமைச்சர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை பட்டியலிட்டார்.

மேலும் நாளை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் சேர்ந்து தில்லியில் உள்ள தமிழ் பள்ளியை நேரில் பார்வையிடுகிறார். அப்போது தமிழகப் பள்ளிகளில் உள்ள குறைகளையும் கேட்டறியவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.