நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடியில் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலமாக நாள்தோறும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
சமீபமாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இங்கு மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது.
போதிய நிலக்கரி இல்லாததால் இன்று முதல் அலகில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 4 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது 10,000 டன் மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
