சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கடிதம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சர்ச்சை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கடிதம்
Published on
Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சர்ச்சை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. 

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த முதலாமாண்டு மாணவா்களை வரவேற்று வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். 

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட மாணவர்களும் இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர். 

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி டீனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர்கள் சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

'தேசிய மருத்துவ கவுன்சிலின் சுற்றறிக்கையின்படியே 'சரக் சப்த்' உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. மேலும் அந்த உறுதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது. எனவே, மருத்துவக் கல்லூரி டீன் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

இதனிடையே கடந்த மார்ச் 11 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் சமஸ்கிருதத்தில்  'சரக் சப்த்' உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com