மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது வருத்தம் அளித்தது: ப.சிதம்பரம் கண்டனம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்
Published on
Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது. 

மருத்துவக் கல்லூரி டீனுக்குத் தெரிவிக்காமல் மாணவர் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

டீன் டாக்டர் ரத்தினவேலு, கரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். 

அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை' என்று பதிவிட்டுள்ளார். 

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை 

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் ஒருவா் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சம்ஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வா் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளாா். 

அதன்படி, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ரத்தினவேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com