பொதுத் தேர்வு: தேர்வு மையங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் போது, தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்சார வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
பொதுத் தேர்வு: தேர்வு மையங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்
பொதுத் தேர்வு: தேர்வு மையங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் போது, தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில்நடவடிக்கை எடுக்க மின்சார வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பொதுத் தேர்வு நடைபெறும் நாளில், ஏற்கனவே பராமரிப்புப் பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டு, அன்றைய நாளில் மின் விநியோகத்தை நிறுத்த அட்டவணையிடப்பட்டிருந்தாலும்கூட, பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடது எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கோடை வெப்பம் காரணமாக மின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்குகிறது. 11ஆம் வகுப்புக்கு மே 10ஆம் தேதியும், 10ஆம் வகுப்புக்கு மே 6ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கி, மாத இறுதி வரை நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில்தான் மின்சார வாரியம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. மேலும், பொதுத் தேர்வு மையங்களுக்கு அருகிலிருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்து ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றி சரி செய்யவும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com