இலங்கை மக்களுக்கு ரூ. 5 லட்சம் நிதி அறிவித்தார் விஜயகாந்த்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவ முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் அளிக்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவ முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் அளிக்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக சார்பில் ரூ. 1 கோடியும், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...