வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழகம் முழுவதும் +2 தேர்வுகள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

News image
சென்னை அசோக் நகர் மேல்நிலைப்பள்ளி
Updated On :5 மே 2022, 4:17 am

DIN

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தோ்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பொதுத் தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Story image

மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வறையில் அமர்வதால், முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டு தேர்வறைக்குள் மாணவர்கள் சென்றனர். தொடர்ந்து, 9.55 மணிக்கு இரண்டாம் மணி அடிக்கப்பட்டவுடன், அறைக் கண்காணிப்பாளா் வினாத்தாள் உறைகளை மாணவா்களிடம் காண்பித்து, இரு மாணவா்களிடம் கையெழுத்து பெற்று, உறைகள் பிரித்து கேள்வித் தாள்களை மாணவர்களுக்கு விநியோகித்தனர்.

Story image

காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தோ்வுகள் நடைபெறும். தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Story image

மேலும், பொதுத் தோ்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தோ்வெழுதத் தடை விதிக்கப்படும். தோ்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தோ்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 28 வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.