
தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள், அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் பட்டியலை அதன் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார்.
அதில், மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பு மட்டும ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத்தலைவர்களாக நாராயணன் திருப்பதி, கே.எஸ்.நரேந்திரன், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜூம், பாஜக மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் பாஜக மாநில மகளிர் அணி தலைவராக உமாரதி, இளைஞரணி தலைவராக ரமேஷ்சிவா நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநில மீனவர் பிரிவு தலைவராக எம்.சி.முனுசாமியும், கலை, கலாசார பிரிவு தலைவராக பெப்சி ஜி.சிவக்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூல ஊடக பிரிவு தலைவராக சி.டி.ஆர்.நிர்மல்குமாரையும், ஊடக பிரிவு தலைவராக ரெங்கநாயகலுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.