இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சட்டம் - ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி வருகிறோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி வருகிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
சட்டம் - ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி வருகிறோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :10 மே 2022, 6:44 am

DIN

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி வருகிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

பதிலுரையில், மதம், சாதி, வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் தடுக்கப்பட வேண்டும். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுதல் குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை, காவல்துறை - மக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த திசையிலிருந்து சிபாரிசு வந்தாலும் சட்டத்தின் பக்கம் நின்று காவலர்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன. ஒரு காவலர் செய்யும் தவறு, ஒட்டுமொத்த அரசுக்கும் குறையாக அமையும்.

அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையை களங்கப்படுத்த வேண்டாம். புதிய முதலீடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.