இளம், முதல்முறை குற்றவாளிகளுக்கு மறு வாழ்வுத் திட்டம்: 78 புதிய அறிவிப்புகள்

தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 78 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 78 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

தொடர்ந்து, காவல்துறையில் புதிய முயற்சிகள், காவலர் நலன், காவல்துறை வாகனங்கள், புதிய பிரிவுகள் உருவாக்குதல், குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

1. வெளி மாநில குற்றவாளிகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் போன்றவர்களில் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வர ஒருங்கிணைந்த சுங்கச் சாவடி கண்காணிப்பு மையம் ரூ. 9 கோடி செலவில் அமைக்கப்படும்.

2. தீ விபத்தின்போது உயரமான கட்டடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், அவசர காலங்களில் நீரில் மூழ்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மீட்கவும் நடமாடும் ஆளில்லா விமான அலகு காவல் படைப்பிரிவு ரூ. 1.20 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும்.

3. இளம் மற்றும் முதல்முறை குற்றவாளிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் ‘பறவை’ என்னும் முன்னோடித் திட்டம் ரூ. ஒரு கோடியில் செயல்படுத்தப்படும்.

4. திருட்டு மற்றும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கண்காணித்து அடையாளம் காணும் விதமாக ‘ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு’ செயலி ரூ. 2 கோடியில் உருவாக்கப்படும்.

5. அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் இரு வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர் கூட்டன் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com